Tuesday, November 13, 2012

துப்பாக்கி விமர்சனம்

நீண்ட இடைவெளிக்கு பிறகு இளைய தளபதி விஜய் சூப்பர் ஹிட் திரைப்படம் ஒன்றை கொடுத்துள்ளார். கில்லி, போக்கிரி வரிசையில் துப்பாக்கியும் இடம் பிடித்துள்ளது. விஜயின் நடிப்பு பிரமாதம். எல்லாருக்கும் பிடிக்கும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் விஜயின் கெட்அப் சூப்பர்.  இப் படத்தில் விஜய் ராணுவ வீரராக வருகிறார். ராணுவ உடை நன்றாக பொருந்துகிறது. வழக்கமான விஜயின் பறந்து பறந்து அடிக்கும் சண்டைக்காட்சி இல்லாமல் கதைக்கு ஏற்றவாறு சண்டை பிடித்துள்ளார். திரைக்கதை விறுவிறுப்பாக நகர்ந்துள்ளது. நேரம் போவதே தெரியவில்லை. விஜய் காமெடியிலும் கலக்கியுள்ளார். அது மட்டுமின்றி வழக்கம் போல நடனத்தில் பட்டையைக் கிளப்பியுள்ளார். 'கூகிள் கூகிள்', 'அட்லாண்டிகா','அலைகா லைக்கா' பாடல் ரசிகர்களை ஆட வைக்கும் அதே நேரம் 'போய் வரவா' பாடல் கண்ணிலிருந்து கண்ணீரை வரவழைத்துள்ளது. விஜய் கதாப்பாதிரமாகவே வாழ்ந்துள்ளார் எனலாம். காஜல் அகர்வால் நடிப்பிலும்,நடனத்திலும் தன திறமையை காட்டியுள்ளார்.
விஜய் தன் குழுவுடன் தீவிரவாதிகளை என்கவுண்டர் பண்ணும் காட்சி அற்புதம். ஜெயராம் ஒரு சில காட்சிகளில் வந்தாலும் நிறைவான நடிப்பை வெளிக்காட்டியுள்ளார். படத்தின் ஒரு சில காட்சிகள் மட்டும் தான் எதிர்மறை கருத்துக்களை வரவழைத்துள்ளது. வில்லனின் நடிப்பு பிரமாதம். அதே வேளை அவரை இயக்குனர் முருகதாஸ் நன்கு பயன்படுத்தவில்லை என்றே சொல்லலாம். ஏழாம்அறிவில் டாங்லி கதாப்பாத்திரம் போல் அமைத்திருந்தால் இன்னும் விறுவிறுப்பாக போயிருக்கும். சத்தியன் மீண்டும் தனது திறமையை நிரூபித்துள்ளார். ஹரிஷ் ஜெயராஜின் இசை படத்துக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

மொத்தத்தில் படம் நன்றாக உள்ளது. திரையரங்குக்கு சென்று பார்க்க வேண்டிய படம். நேற்றைய தினம் தான் படம் பார்த்தேன். இரவு 12.30 மணிக் காட்சி. நேற்று மட்டும் 5 தடவை படம் காண்பிக்கப் பட்டது.  5 தடவையும் திரையரங்கு நிறைந்து வழிந்தது.

படத்துக்கு 85% புள்ளிகள் போடலாம்.

Thursday, November 8, 2012

காந்தியின் பக்தன் நான்: கமலஹாசன் பேட்டி

உலகநாயகன் கமல் இயக்கி, நடித்துள்ள ‘விஸ்வரூபம்’ படம் ‘ஆரோ 3டி’ ஒலி தொழில்நுட்பத்தில் தயாராகியுள்ளது.
இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது.
டிரெய்லரை வெளியிட்ட கமலஹாசன் பேசுகையில், ‘விஸ்வரூபம்’ படத்தின் ‘ஆரோ 3டி’ டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டு உள்ளது.
இசை வெளியீட்டு விழாவை முக்கிய நகரங்களில் இன்று நடத்த திட்டமிட்டோம். வானிலை சாதகமில்லாததால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக 25 ஊர்களில் ‘விஸ்வரூபம்’ டிரெய்லரை ரசிகர்கள் காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இங்கு ரலீஸ் செய்த நேரத்தில் மற்ற ஊர்களில் 30 ஆயிரம் ரசிகர்கள் அரங்குகளில் அமர்ந்து இதை கண்டு இருப்பார்கள்.
‘விஸ்வரூபம்’ ரிலீஸ் திகதி இன்னும் முடிவாகவில்லை. இந்தியிலும் இப்படத்தை வெளியிடுகிறோம் என்றார்.
விஸ்வரூபம்’ இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிரான படமா? என்ற கேள்விக்கு பதிலளித்த கமல், இந்த படம் எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல.
இந்தியாவில் எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதே என் விருப்பம். நான் காந்தியின் பக்தன்.
இங்கு எந்த மதத்தினர் உட்கார்ந்து இருக்கிறார்கள் என்று பார்க்க மாட்டேன்.
மனிதர்களைத்தான் பார்க்கிறேன். மதங்களை கொண்டாடுவது இல்லை. மனிதர்களை கொண்டாடுகிறேன்.
எந்த மதத்தினரையும் வித்தியாசமாக பார்ப்பது இல்லை என்றும் காந்திய வழியிலேயே எனது அணுகுமுறைகளும் இருக்கும் எனவும் கூறியுள்ளார்.
 

அஜித்திடம் நலம் விசாரித்த நட்சத்திரங்கள்.

படப்பிடிப்பில் அஜித்திற்கு ஏற்பட்ட காயத்தையடுத்து சக நடிகர், நடிகைகள் அனைவரும் அஜித்திடம் நலம் விசாரித்தனர்.
விஷ்ணு வர்தன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படமொன்றில் அஜித் நடித்துவருகிறார்.
படத்திற்கான சண்டைக் காட்சியில் டூப் போடாமல் நடித்த போது அஜித்தின் கால் கார் டயரில் சிக்கிக் கொண்டது.
இதையடுத்து படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டாலும் சிகிச்சை எடுத்துக்கொண்டு தற்போது மற்ற காட்சிகளில் அஜித் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் சிம்பு, இயக்குனர் வெங்கட் பிரபு, நயன்தாரா, ஆர்யா ஆகியோர் காயம் குறித்து நலம் விசாரித்தனர்.
இப்படத்தில் அஜித்துடன் ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி ஆகியோர் நடிக்கின்றனர்.

கோச்சடயானுக்கு சொந்தக் குரலில் பேசும் தீபிகா..

எப்பொழுது பார்த்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'கோச்சடயான்' பற்றிய தகவல்கல் வந்த விதமாகவே உள்ளன. இத் திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பாலிவூட் நடிகை தீபிகா படுகோன் நடிக்கிறார். நாளுக்கு நாள் இத் திரைப்படத்துக்கான எதிர் பார்ப்பு அதிகரித்த விதமாகவே உள்ளது.

இத் திரைப்படத்தை ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா இயக்கி வருகின்றார். அது ஒரு அனிமேஷன் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே இப் படத்தை சர்வதேச அளவில் வெளியிட உள்ளனர்.

இப்படத்தில் 'cutting edge technology' மூலம் நேற்றைய கலைஞர்களான நாகேஷ், வீரப்பா, நம்பியார், மனோகர், அசோகன் ஆகியோரை இணைக்கிறார்கள்.

சர்வதேச அளவில் வெளியிட இருப்பதால் ஜப்பான்,இத்தாலி, ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் இப் படத்தை வெளியிடுகிறார்கள். 

இத் திரைப்படத்துக்காக பாலிவூட் அழகி தீபிகா படுகோன் சொந்த குரலில் பேசி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சயீப் அலிகான் குடும்பத்தில் சொத்து தகராறு...

பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகான் குடும்பத்தில் சொத்து தகராறு எழுந்துள்ளது.
இவருக்கும் இந்தி நடிகை கரீனா கபூருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. இதனால் சொத்துக்கள் கைவிட்டு போய்விடுமோ என்று குடும்பத்தினர் அஞ்சுகிறார்கள்.
எனவே அவற்றை பிரித்துக் கொடுக்கும்படி போர்க்கொடி தூக்கி உள்ளனர். சயீப் அலிகான் ‘பட்டோடி நவாப்’ பரம்பரையை சேர்ந்தவர்.
பட்டோடி அரண்மனை, விவசாய நிலங்கள், கட்டிடங்கள், வணிக வளாகங்கள் என்று பட்டோடி நவாப் குடும்பத்தினருக்கு நிறைய சொத்துகள் உள்ளது.
இவற்றின் மொத்த மதிப்பு ரூ.750 கோடியாகும்.
மன்சூர் அலிகான் பட்டோடியின் ஒரே மகன் சயீப் அலிகான் என்பதால் இந்த சொத்துக்கள் அவர் கைவசம் உள்ளன.
சயீப் அலிகான் சகோதரிகள் சபா, சோகா அலிகான் ஆகியோரும் இதனை அனுபவிக்கிறார்கள்.
ஆனால் மறைந்த மன்சூர் அலிகான் சகோதரிகள் சலீகா, சபீகா ஆகியோரும் இந்த சொத்துக்கு உரிமை கொண்டாடுகிறார்கள்.
தங்களுக்கு சொத்தில் பங்கு தர வேண்டும் என்றும், வற்புறுத்தி வருகிறார்கள்.
இதனால் சயீப் அலிகான் தாய் சர்மிளா தாகூர் குழப்பமடைந்து உள்ளார். இவர்களின் சொத்து சண்டையை பார்த்த நடிகை கரீனா கபூரும் அதிர்ச்சியாகியுள்ளார்.
சொத்துக்களை குடும்பத்தினர் எல்லோருக்கும் பிரித்து கொடுக்க மத்தியஸ்தர்களை வைத்து பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது.

துப்பாக்கி வெளியீடு தள்ளி வைப்பு...

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் நடித்துள்ள திரைப்படம் துப்பாக்கி. இத் திரைப்படம் நாளை ஒன்பதாம் திகதி வெளிவருவதாக இருந்தது. ஆனால் இத் திரைப்படம் தீபாவளி தினத்தன்று தான் வெளிவரவுள்ளது.

இத் தீபாவளி வெளியீடாக சிம்புவின் 'போடா போடி', தங்கர்பச்சானின் 'அம்மாவின் கைபேசி' ஆகிய திரைப்படங்களும் வரவிருப்பது யாவரும் அறிந்ததே. 'அஜந்தா ' , நாகார்ஜுனா,அனுஷ்கா நடித்துள்ள தெலுங்குப் படமான 'தம்மார்க்கம்' நாளை ஒன்பதாம் திகதி திரைக்கு வருகின்றன.

இதில் 'அஜந்தா' திரைப்படத்துக்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார். இத் திரைப்படத்தை ராஜ்பா ரவிசங்கர் இயக்கியுள்ளார்.

அத்துடன் விஷ்ணு, சுனைனா நடித்துள்ள 'நீர்ப்பறவை' படமும் தீபாவளி தினத்தன்று வெளிவருகிறது. இத் திரைப்படத்தை சீனுராமசாமி இயக்கியுள்ளார். அத்துடன் புதுமுகங்கள் நடித்துள்ள 'காசிக்குப்பம்' படமும் தீபாவளிக்கு வெளியாகின்றது.

தீபாவளி தினத்தன்று வரவிருந்த 'கள்ளத்துப்பாக்கி' 23ம் திகதி வெளியாகின்றது.

Tuesday, November 6, 2012

கோச்சடையானிலிருந்து நீக்கப்பட்ட கே.எஸ்.ரவிக்குமார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடிக்கும் படம் ‘கோச்சடையான்’.
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், தற்போது இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன.
வரலாற்று கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார்.
இப்படம் முழுக்க முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இப்படத்தின் இயக்குனர் மேற்பார்வையை கே.எஸ்.ரவிக்குமார் கவனித்துக் கொண்டிருந்தார்.
தற்போது அந்த பொறுப்பு இயக்குனர் மாதேஷிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் மாதேஷ் ‘மதுர’, ‘சாக்லேட்’, ‘மிரட்டல்’ ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

காயம் அடைந்த அஜித்..

பில்லா 2 படத்தை அடுத்து விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் அஜித்.
வேகமாக வளர்ந்து வரும் இந்தப் படத்தில் அஜித்துடன் நயன்தாரா, ஆர்யா, டாப்சி மற்றும் பலர் நடிக்கின்றனர்.
ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நேற்று நடந்த படப்பிடிப்பில் ஒரு காரில் இருந்து இன்னொரு காருக்கு அஜித் தாவுவது போன்று ஒரு காட்சி படமாக்கப்பட்டது.
25 அடி உயரத்திற்கு மேல் இருந்து குதிக்க வேண்டும். ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று விஷ்ணுவர்த்தன் அறிவுறுத்திய பின்னரும், டூப் இல்லாமல் தானே நடித்தார் அஜித்.
இந்தக் காட்சி படமாக்கப்பட்ட போது, அவரது கால் காரின் முன்பக்க டயரில் சிக்கியது.
காயம் அடைந்த அஜித்துக்கு உடனே சிகிச்சை அளிக்கப்பட்டதுடன், படப்பிடிப்பும் சில மணி நேரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டது.
அடிபட்ட பின்னரும் வலியை பொறுத்துக் கொண்டு மீண்டும் அந்த சண்டைக் காட்சியில் நடித்து முடித்தார் அஜீத்.
மங்காத்தா படப்பிடிப்பின் போதும் காலில் காயம் ஏற்பட்டபோதும் வலியை பொறுத்துக்கொண்டு நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, November 5, 2012

ஜாலியான 'ஐ டி' ஹாக்கராக வருகிறார் அஜித்.

கொலிவுட்டில் அஜித், ஆர்யா, நயன்தாரா, டாப்சி ஆகியோர் நடிப்பில் இன்னும் தலைப்பு வைக்கப்படாத படத்தை இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கி வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது.
படத்தின் வசனக்காட்சிகளை எழுபது நாட்களில் மும்பையில் படமாக்க இயக்குனர் விஷ்ணுவர்தன் திட்டமிட்டுள்ளார்.
இப்படத்தில் நாயகன் அஜித் ஜாலியான 'ஐ டி' ஹாக்கராக வருகிறார்.
கொலிவுட் படங்களில் அஜித் வித்தியாசமான வேடங்களில் தற்போது நடித்து வருகிறார்.
இன்னும் முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் அஜித்தை இப்படத்தில் பார்க்கலாம்.
அடுத்து இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் அஜித் நடிக்கிறார்.
இதில் ஆக்சன் ஹீரோ இமேஜை உதறி தள்ளி விட்டு குடும்ப ரசிகர்களை கவரும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்கிறது கொலிவுட் பட வட்டாரம்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக வெளியாகிறது பரதேசி..

இயக்குனர் பாலா இயக்கிக் கொண்டிருக்கும் திரைப்படம் பரதேசி. இதில் அதர்வா, தன்ஷிகா ஆகியோர் நடிக்கிறார்கள். இத் தீபாவளிக்கு வெளியாகும் என பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இத் திரைப்படம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளது. இம் மாதம் 24ம்  திகதியளவில் இப் படத்தின் பாடல்களை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இப் படம் 1930களின் பின்னணியில் உருவாக்கப்படுகிறது. மலையாள நாவல் ஒன்றின் கதையை மையமாகக் கொண்டு இப் படத்தை இயக்கியுள்ளார் பாலா. நாஞ்சில் நாடன் இப் படத்திற்கான வசனத்தை எழுதியுள்ளார்.

யோஹனில் விஜய்க்கு பதில் மகேஷ் பாபு...

கொலிவூடில் கெளதம்மேனன் இயக்கம் திரைப்படம் 'யோகன்'. இத் திரைப்படத்தை விஜயை வைத்து இயக்குவதாக இருந்தது. எனவே இத் திரைப்படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் இத் திரைப்படம் இப்பொழுது கைவிடப்பட்டுள்ளது. இத் திரைப்படம் ஆங்கில பாணியில் இருந்ததால் கதையில் மாற்றத்தை செய்து தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரி படம் பண்ணுவோம் என்று விஜய் கூறி விட்டார். ஆனால் கெளதமிற்கு மூன்று மொழியிலும் இப் படத்தை இயக்க வேண்டும் என்று ஆசை. ஆகவே தெலுங்கு திரையுலகின் நட்சத்திர நாயகனான மகேஷ் பாபுவை நாடியுள்ளார். மகேஷ் பாபுவும் சம்மதம் தெரிவித்து விட்டார். திரைக்கதையையும் திரைப்படத்தின் தலைப்பையும் மாற்றி கெளதம் பட வேலையில் இறங்கவுள்ளார்.

சகுனமே சரியில்லையே... துப்பாக்கி வேற வரப் போகுது, என்ன ஆக போகுதோ..

Thursday, November 1, 2012

விஜயின் கூகிள் கூகிள் பாடல் உருவாகும் காட்சி


கடுப்பாகியுள்ள ஷங்கர்..

சீன காட்டிற்குள் விறுவிறுவென நடந்து வந்த ஐ படப்பிடிப்பை முடித்து விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள் படக்குழு.
இயக்குனர் ஷங்கரின் ஐ, படப்பிடிப்பு சீனாவில் 40 நாட்கள் நடந்துள்ளது.
இந்த 40 நாட்களில் ரூ.40 கோடியை தாராளமாக செலவு செய்திருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.
இதற்கிடையே சியான் விக்ரமும் எமியும் அடிக்கடி காட்டிற்குள் சென்று விடுகிறார்களாம். இதனால் சற்று கடுப்பாகியுள்ளார் இயக்குனர் ஷங்கர்.
இதை தனது டுவிட்டரில் கொட்டிய எமி, ‘இப்போது ஜெட் லீ யின் ‘க்ரோச்சிங் டைகர் ஹிட்டன் ட்ராகன்’ படப்பிடிப்பு நடந்த அடர்ந்த காட்டுப்பகுதியில் நானும் விக்ரமும் மட்டும் இருக்கிறோம். வேற ஏதாவது டீடெய்ல்ஸ் வேண்டுமா?’ என்று கேட்கிறார்.
ஏற்கனவே, இரவு நேர விருந்துகளுக்கு சென்று விட்டு மறுநாள் படப்பிடிப்பில் வந்து எமி தூங்குகிறார் என்ற குற்றச்சாட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரகுமானின் கடல் திரைப்பட பாடல் வெளியீடு

ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் கடல் படத்தின் ஒரே ஒரு பாடல் வரும் 3ம் திகதி வெளியாகிறது.

மணிரத்னம் இயக்கத்தில் வளர்ந்து வரும் கடலில் கார்த்திக் மகன் கௌதமும்
ராதா இளைய மகள் துளசியும் நடிக்கின்றனர்.
முழுநீளமாக கடல் சார்ந்தே இப்படப்பிடிப்பு நடந்து வருகிறது.
படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில் படத்தில் வரும் நெஞ்சுக்குள்ளே என்ற ஒரு பாடலை வரும் 3ம் திகதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்களுக்கு இந்த பாடலை ஒரே நேரத்தில் கொண்டு சேர்ப்பதற்காக எம்.டி.வி மூலம் வெளியிடவிருக்கிறார்கள்.
இதில் கூடுதல் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் நேரடியாகவே இசையமைக்க போகிறார்.
இந்நிகழ்ச்சி வரும் 3ம் திகதி இரவு 8 மணிக்கு எம்.டிவியில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.

வெடிக்கும் விஜய் ..

தீபாவளிக்கு முன்னரே சரவெடி ஆரம்பித்து விட்டது. நம்ம விஜயின் துப்பாக்கி பற்றித்தான் சொல்லுறன். படம் வெளியாக முதலே படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது.


விஜய், முருகதாஸ்,கலைப்புலி தாணு கூட்டணியில் எதிர்வரும் ஒன்பதாம் திகதி துப்பாக்கி திரைப்படம் வெளியாகவுள்ளது. விஜய் வேறு இது போன்ற படத்தில் நடித்ததே இல்லை என்று கூறி விட்டார். அதனால் படத்துக்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து விட்டது. முருகதாஸ் இப் படத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளார். இப் படம் தமிழில் வெற்றி பெற்றால் இந்தியிலும் எடுக்க முடிவு செய்துள்ளாராம்...

Wednesday, October 31, 2012

இந்தியாவின் அழகியானார் நமீதா...

உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள அழகிய பெண்களின் புகைப்படங்கள், அவர்களின் அணுகுமுறை போன்றவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு பிரபலத்தை அழகியாக அறிவிக்கிறது டோக்கியோ தொலைக்காட்சி.
இந்த ஆண்டிற்கான இந்தியாவின் அழகியாக நடிகை நமீதாவை அறிவித்துள்ளது டோக்கியோ தொலைக்காட்சி.
இந்தியாவின் புகைப்படக் கலைஞர் கார்த்திக் சீனிவாசன் எடுத்த புகைப்பட ஆல்பத்திலிருந்து நமீதாவின் ஒரு புகைப்படத்தைத் தெரிவு செய்து, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து அந்த தொலைக்காட்சி வெளியிட்டுள்ள அறிவிப்புக் கடிதம்: யாரி சுகி கோ ஜி - அர்பன் லெஜன்ட்ஸ் ஸ்பெஷல் (Yari-sugi ko-ji -Urban Legends Special) எனும் தலைப்பில் வரும் நவம்பர் 2ம் திகதி ஒரு சிறப்பு ஒளிபரப்பை மேற்கொள்கிறோம்.
இதில் இந்தியாவுக்கான அழகியாக நடிகை நமீதாவை தெரிவு செய்துள்ளோம்.
வரும் நவம்பர் 2ம் திகதி இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. உலகின் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள சுவாரஸ்யமான உண்மைகள், சம்பவங்களை தொகுத்து வழங்குவதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டு உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள அழகிகள் பற்றி சிறப்பு நிகழ்ச்சியை வழங்குகிறோம். அழகு என்பது நாட்டுக்கு நாடு எப்படி மாறுபடுகிறது என்பதைக் காட்டுவதுதான் நோக்கம்.
இதற்காக இந்திய கலைஞர் கார்த்திக் சீனிவாசன் எடுத்த நடிகை நமீதாவின் படத்தை இந்திய அழகின் பிரதிநிதியாக தெரிவு செய்துள்ளோம்.
இந்திய அழகின் பிரதிநிதியாக நமீதாவின் படத்தை தெரிவு செய்துள்ளோம் என்பதைத் தெரிவிக்கவே இந்த முறையான அறிவிப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஜினியை புகழ்ந்து தள்ளிய தீபிகா..

உடல் நிலை பாதிக்கப்பட்ட பின்பும் ரஜினியின் வேகம் குறையவில்லை என புகழ்ந்துள்ளார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன்.
ரஜினி ஜோடியாக கோச்சடையான் படத்தில் நடித்துள்ளார் தீபிகா படுகோன்.
இது குறித்து அவர் கூறுகையில், சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்த அனுபவம் மறக்க முடியாதது. எத்தனை ஆண்டுகளாக அவர் சினிமாவில் இருக்கிறார்.

ஆனாலும் சினிமாவின் மீதான அவரது ஆர்வம் குறையவில்லை. ஷூட்டிங் ஸ்பாட்டில் மானிட்டர் முன் அமர்ந்து தான் நடித்த காட்சிகளை ஒரு குழந்தையை போல் பார்ப்பார்.
தான் நடித்த காட்சிகள் மட்டுமல்ல, மற்றவர்கள் நடித்த காட்சியைகூட பார்ப்பார். நன்றாக நடித்திருந்தால் உடனே கைதட்டி, பாராட்டுவார்.
அவரது கண்களை பார்த்தாலே சினிமா மீது அவருக்குள்ள ஈடுபாட்டை பார்க்க முடியும். அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டபோது வருத்தப்பட்டேன். அவர் சீக்கிரம் குணமடைய பிரார்த்தித்த ஏராளமானவர்களில் நானும் ஒருத்தி.
அவர் சிகிச்சை முடிந்து திரும்பிய பின் படப்பிடிப்பில் பங்கேற்றார். உடல் நலம் பாதிப்பதற்கு முன் எந்த வேகத்துடன் இருந்தாரோ அதே வேகம் அவரது நடவடிக்கைகளில் தெரிந்தது.
தமிழில் மட்டுமின்றி இந்தி, மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழியிலும் இப்படம் வெளியாகிறது என்று தெரிவித்துள்ளார்.

வெளியானது சிவாவின் 'சொன்னாப் புரியாது' teaser


மிர்ச்சி சிவா நடித்துள்ள சொன்னா புரியாது படம், அவருக்கு கொமெடி தளபதி என்ற பெயரை பெற்றுத்தருமென எதிர்பார்க்கப்படுகிறது.




முழு நீள கொமெடிப்படமாக உருவாகி வரும் இப்படத்தில் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக வசுந்ரா, பிளேட் சங்கர், ஆதிஷ், மனோபாலா என பலர் நடிக்கின்றனர்.

இளைய தளபதி, அல்மேட் ஸ்டார், புரட்சித்தளபதி வரிசையில் கொமெடி தளபதியாக வலம் வரப்போகிறார் மிர்ச்சி சிவா.
படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதி கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்க, யாதேஷ் மாதவ் இசையமைத்திருக்கிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தில்லு முல்லு படத்தின் ரீமேக்கில் சிவா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, October 26, 2012

விஜய் டிtvயின் சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 வெற்றியாளரானார் ஆஜித்

கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக விஜய் ரீவி இல் நடைபெற்று வந்த சூப்பர் சிங்கர் யூனியர் 3 பைனல் இன்று நிறைவுக்கு வந்துள்ளது.
ஆரம்பத்தில் நூற்றுக்கணக்கான யூனியர் பங்குகொண்டு  ஆரம்பித்த இச் சுப்பூர் சிங்கர் யூனியர் திறமையானவர்களை தேர்ந்தெடுத்து கடந்த வாரமாக மிகவும் சூப்பராக பாடிய 5 யூனியர்களோடு இன்று கடைசி சுற்று முடிந்துள்ளது.

எல்லோர் மனதையும் கொள்ளை கொண்டு 5 இளஞ்சிட்டுக்கள் ஒருவருக்கொருவர் சளைக்காமல் தம் திறமைகளை வெளிப்படுத்தி நன்றாகவே பாடினார்கள்.
இந்நிலையில் 10 வயதே நிரம்பிய ஆஜித் என்ற பையன் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை தன்னகத்தே கொண்டு இச்சூப்பர் சிங்கர் யூனியர் 3 இல் வெற்றி பெற்றுள்ளார்.
10 வயதே நிரம்பிய ஆஜித் என்ற இளஞ்சிட்டு வசீகரத் தோற்றத்தோடு மெருகூட்டும்வகையில் அழகாக ஆடை அணிகலங்களோடு, தன் வயதுக்கு மீறி கடினமான பாடல்களையும் பாடி நடுவர்களையும் பார்வையாளர்களையும் தன்பக்கம் ஈர்த்து இன்று வெற்றிவாகை சூட்டிய அப்பையனுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதோடு,
இரண்டாம் இடத்தைப் பெற்ற அமெரிக்காவில் இருந்து சென்று பங்குபற்றி இத்தனை மாதகாலமாகவும் தன் திறமையை வெளிப்படுத்திய பிரகதிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
சூப்பர் சிங்கர்  யூனியர்1இலும் 2இலும் பங்குபற்றி  திறமை போதாமையால் விலக்கப்பட்ட யாழினி சூப்பர் சிங்கர் யூனியர் 3இலும் பங்குகொண்டு இம்முறை 3ம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.



தென்னிந்திய படத்தில் நடிக்க மாட்டாரா தமன்னா?

தென்னிந்திய படங்களில் நடிக்க மாட்டேனா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார் தமன்னா.
அவர் கூறுகையில், ஹிம்மத்வாலா படம் எனது பாலிவுட் ரீ என்ட்ரி. இந்தியை பொருத்தவரை வருடத்துக்கு 2 படங்களுக்கு மேல் என்னால் நடிக்க முடியாது என்று எண்ணுகிறேன்.
இந்திக்கு செல்வதால் தென்னிந்திய படங்களுக்கு முழுக்கு போட்டு விடுவேன் என்று அர்த்தம் கிடையாது, அப்படி நினைத்துக்கூட பார்த்ததில்லை.
இன்றைக்கு இந்த நிலைக்கு உயர்ந்திருக்க காரணம் தென்னிந்திய படங்கள் தான். தென்னிந்திய மொழிகளையும் நான் பேச கற்று வைத்திருக்கிறேன்.
இதனால் என் வேடங்களுக்கு நானே டப்பிங் பேசவும் தொடங்கி இருக்கிறேன். நான் பேசும் ஆங்கிலம் கூட தென்னிந்திய வாடையில் தான் இருக்கிறது.
இந்தியில் நடிக்கிறேனென்றால் தென்னிந்திய படங்களில் கிடைக்கும் இடைவெளியாகவே இருக்கும் என்று தெரிவித்தார்.

40 கோடி செலவில் ஆதிபகவான்

ஜெயம் ரவி, நீத்து சந்திரா நடிப்பில் அமீர் இயக்கத்தில் 'ஆதி பகவன்' படத்தை அன்பு பிக்சர்ஸ் ஜெ.அன்பழகன் தயாரித்துள்ளார்.
இப்படம் பற்றி அமீர் கூறுகையில்: ராம், பருத்திவீரன் படங்களின் மூலம் யதார்த்த சினிமாவில் பயணித்த நான் முதல் முறையாக கமர்சியல் தளத்தில் பயணித்துள்ளேன்.
பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த அதிரடிஅபடமாக 'ஆதி பகவனை' உருவாக்கியுள்ளேன். படத்துக்காக சுமார் 150 நாட்களுக்கு மேலாக படக்குழு கடுமையாக உழைத்துள்ளது.
குஜராத் மாநிலம் பூஜ், ராஜஸ்தான் ஜெய்சல்மர், கோவா, பாங்காக், ஹைதராபாத், மும்பை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் படபிடிப்பை நடத்தியுள்ளோம். படத்தின் இறுதி சண்டைக்காட்சியை பிஹானிர் கோட்டையில் பிரமாண்ட முறையில் படமாக்கினோம்.
யுவன் ஷங்கர் ராஜாவும் நானும் கை கோர்க்கும் ஐந்தாவது படம் இது. தமிழ் சினிமாவில் 7.1 டிஜிடல் ஒழி தொழில் நுட்பத்தில் தயாரான முதல் படம் ஆதிபகவான். கொலிவுட் தரத்தில் படத்தை உருவாக்கியுள்ளோம்.
நாற்பது கோடி செலவில் பிரமாண்ட படமாக ஆதிபகவன் வந்திருப்பதாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் 'ஆதிபகவன்' பட இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மாடல் அழகியின் மரணத்தால் அதிர்ந்து போன கவுதம் ...

மிஸ் சென்னை போட்டியில் அழகி பட்டம் வென்ற மொடல் அழகி பிதுஷி மும்பையில் படுகொலை செய்யப்பட்டார்.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் கமல் நடித்த ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் பிரகாஷ்ராஜ் மகள்  கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மராட்டிய மாநிலம் புனேயை சேர்ந்த என்ஜினீயர் கேதார் சதாசிவ் (வயது 26) என்பவரை காதலித்து மணந்தார்.
மும்பை அந்தேரியில் கணவருடன் வசித்து வந்த வீட்டிலேயே அவர் கொலை செய்யப்பட்டு உள்ளார்.
இந்த கொலை குறித்து இயக்குனர் கவுதம் மேனன் கூறுகையில், பிதுஷி கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து நான் அதிர்ச்சியானேன்.
‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் குறிப்பிட்ட காட்சியில் நடிக்க நிறையபேர் முன்வந்தனர்.
அவர்களில் பிதுஷி பொருத்தமானவராக இருந்தார். சில விளம்பரங்களில் மொடலாக நடித்து இருந்தார். அவர் தோற்றம் எனக்கு பிடித்ததால் தெரிவு செய்தேன்.
படப்பிடிப்பு தொடங்கிய இரண்டாவது நாளில் பிதுஷி சோர்வாக இருந்தார். அவருக்கு சர்க்கரை நோய் இருப்பதாக தெரிவித்தனர்.
படம் முடிந்த பின்பும் அவரது தாய் என்னுடன் தொடர்பில் இருந்தார் என்றும் இந்நிலையில் அவர் கொலை செய்யப்பட்ட செய்தியால் அதிர்ந்தேன் எனவும் கூறியுள்ளார்.

மீண்டுமொரு நித்தியானந்தா..

ஆர் புரடக்ஷன்ஸ் சார்பில் ஆர். முத்துக்குமார் இயக்கும் புதிய படம் வெண்ணிலாவின் அரங்கேற்றம்.
ஆர். முத்துக்குமார் ஏற்கெனவே "தொடக்கம்" என்கிற படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் புதுமுகங்கள் சமஸ்தி, மிதுனாவாலியா கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கதாநாயகனாக தினேஷ் நடிக்கிறார்.
"வெண்ணிலாவின் அரங்கேற்றம்" படத்துக்காக சர்ச்சைக்குரிய நித்யானந்தா - ரஞ்சிதா சம்பந்தப்பட்டது போன்ற ஒரு காட்சி படமாக்கப்பட்டது.
சந்தர்ப்ப சூழ்நிலையில் விபச்சாரியாக மாற்றப்பட்ட இளம்பெண் ஒருவள் தனது வாழ்க்கையை விவரிக்கிறார்.
தனது ஒவ்வொரு இரவும் எப்படி கழிந்தது தன்னோடு படுக்கையை பகிர்ந்து கொண்ட பிரபலங்கள் யார்? யார்? என்பதை அவள் விவரிப்பதே படத்தின் கதை.
படத்தில் ஒரு காட்சியில் இடம் பெறும் நித்யானந்தா சர்வானந்தா சித்தரிக்கப்பட்டிருக்கிறார்.
நித்யானந்தாவாக மூர்த்தி என்கிற திருநங்கை நடித்துள்ளார். அவருடன் படத்தின் கதாநாயகிகளில் ஒருவரான சமஸ்தி நடித்தார்.
விபச்சாரத் தொழிலில் உள்ள பல்வேறு தடங்களை கண்முன் கொண்டு வரும் காட்சி அமைப்புகள், அவர்களின் உள்மண உணர்வுகள் ஆகியவற்றை இயக்குனர் மிக தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

துப்பாக்கி முன்னோட்டக் காட்சி(trailer) வெளியீடு

பலரின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள துப்பாக்கி படத்தின் முன்னோட்டக்காட்சி வெளியிடப் பட்டது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இத் திரைப்படமானது போலீஸ் கதையை மையமாக வைத்து எடுக்கப் பட்டுள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். விஜய்க்கு வில்லனாக அஜித்தின் பில்லா 2  வின் வில்லன் நடித்துள்ளார்.

Thursday, October 25, 2012

ஆர்யாவுக்கு முத்தம் கொடுக்க தயங்கிய அஞ்சலி

இந்தியின் டெல்லி பெல்லி திரைப்படத்தின் ரீமேக் தான் ஆர்யா,சந்தானம், அஞ்சலி,பிரேம்ஜி நடிக்கும் சேட்டை. இத் திரைப்படத்தை கண்ணன் இயக்குகின்றார். டெல்லி பெல்லியில் நாயகன் இம்ரான் கான் இற்கும் நாயகி பூர்ணாவிற்கும் முத்தக்காட்சி ஒன்று இடம் பெற்றிருந்தது. அதே போல் தமிழிலும் முத்தக்காட்சி இடம்பெற்றால் நன்றாக இருக்கும் என இயக்குனர் கண்ணன் எண்ணியுள்ளார். இம் முத்தக்காட்சியைப் பற்றி முன்னர் அஞ்சலியிடம் கூறவில்லையாம். கூறாமலே அவரின் கால்ஷீட்டை வாங்கி விட்டார் கண்ணன். இப்பொழுது இத் திரைப்படம் மும்பையில் படமாக்கப்பட்டு வருகிறது. திட்டமிட்ட படி அந்த முத்தக்காட்சியையும் மும்பையிலேயே படமாக்க முடிவு செய்திருக்கிறது படக்குழு. 

காட்சி படமாக்கப்பட முன்பு தான் அஞ்சலியிடம் இந்த முத்தக்காட்சி பற்றி இயக்குனர் தெரிவித்திருந்தார். இதைக்கேட்ட அஞ்சலி அதிர்ந்து போனார். முத்தக்காட்சிக்கும் தயங்கினார். இதனால் படப்பிடிப்பில் பதட்டம் நிலவியது.
பின்னர் இயக்குனர் அஞ்சலியிடம், நீங்கள் படத்தில் மாடர்ன் பெண்ணாக நடிக்கிறீர்கள். அது மட்டுமல்லாமல் தைரியமான பத்திரிகையாளராகவும் நடிக்கிறீர்கள். இக் காட்சி படத்தையும் உங்கள் வேடத்தையும் மெருகேற்றும் எனவும் கூறி சமாளித்துள்ளார். இறுதியில் சமாதானம் ஆனார் அஞ்சலி. முத்தக்காட்சியும் நடந்தது.(ஆர்யாக்கு முந்தி த்ரிஷா இப்ப அஞ்சலி ;) )

Wednesday, October 24, 2012

தேவி ஸ்ரீ பிரசாத்தை பாராட்டிய கார்த்தி


கார்த்தி அனுஷ்கா நடித்து திரைக்கு வர இருக்கும் திரைப்படம் அலெக்ஸ் பாண்டியன். அலெக்ஸ் பாண்டியன் படத்தின் இறுதிகட்ட இசையை கேட்டு தேவி ஸ்ரீ பிரசாத்தை புகழ்ந்து தள்ளியுள்ளாராம் கார்த்தி.
சிறுத்தை படத்திற்கு பின்னர், கார்த்தி தன்னுடைய அதிரடி வேட்டையை அலெக்ஸ் பாண்டியன் படத்தின் மூலம் தொடங்க இருக்கிறார். திருமணத்திற்கு பின்னர் நடித்த சகுனி படம் முழு நீள ஆக்சன் படமென கூறமுடியாது.ஆனால் இதற்கு முன்பு நடித்த சிறுத்தை படத்திற்கு சமமான நிலையில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிற அலெக்ஸ் பாண்டியன் அதிரடி படமென கூறலாம்.
சமீபத்தில் வெளியான டீசரில், கார்த்தியின் அனல் பறக்கும் சண்டைக்காட்சிகள் படு பயங்கரமாக இருந்தது.
இதற்கிடையில் படத்திற்கு இசை கோர்ப்பு வேலைகளும் முடியும் தருவாயில் உள்ளதாம்.
சமீபத்தில் இறுதிக்கட்ட இசைக்கோர்ப்பை கேட்ட கார்த்தி, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு பாராட்டு எஸ்.எம்.எஸ் அனுப்பினாராம். இதை தேவி, தனது டுவிட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார்.

கௌரவ பிளாக் பெல்ட் விருது வாங்கிய மோகன்லால்

பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு தென் கொரிய நாட்டின் கராத்தே அமைப்பின் கவுரவ பிளாக்பெல்ட் விருது வழங்கப்பட உள்ளது.
இதுபோன்ற விருது ஏற்கனவே, இந்தி நடிகர் ஷாருக்கானுக்கு வழங்கப்பட்டுள்ளது. மலையாள, தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் மோகன்லால். மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு விருதுகளை பெற்றுள்ள இவருக்கு மத்திய ராணுவத்தின், "லெப்டினென்ட் கர்னல்" அந்தஸ்து கொண்ட கவுரவ பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தென் கொரிய அரசின் கீழிலுள்ள, தாய்கோண்டா அமைப்பின் தலைமை நிலையமான, குக்கிஓண் சார்பில் ஆண்டுதோறும் கவுரவ பிளாக்பெல்ட் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான, இந்த விருது நடிகர் மோகன்லாலுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இவர், 1977-78ம் ஆண்டுகளில் கேரளாவில் மாநில குத்துச்சண்டை சாம்பியனாக இருந்தார். மேலும், திரைப்படங்களில் வீர விளையாட்டுக்களில் நடித்தும் சிறப்பித்துள்ளார்.
இதுபோன்ற, பல்வேறு சாதனைகளுக்காக, நடிகர் மோகன்லாலுக்கு இந்த விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விருது வழங்கும் விழா திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும், கேரள தாய்கோண்டா அமைப்பின் பொது செயலாளர் அஜி தெரிவித்தார்.

நயன்தாராவை சந்தித்த ஆர்யா

பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் மூலம் ஆர்யா, நயன்தாரா இருவரும் இணைந்து நடித்தனர்.
படப்பிடிப்பில் ஆர்யாவின் கலகலப்பான பேச்சும், நடத்தைகளும் நயன்தாராவுக்கு பிடித்து இருந்தால், இருவரும் நண்பர்களாகி விட்டனராம்.
அதன் பிறகு பிரபுதேவாவுடன் திருமண ஏற்பாடு நடந்ததால் நயன்தாரா சினிமாவை விட்டு ஒதுங்கினார். இதனால் நட்பில் தடங்கல் ஏற்படவே, இருவரும் பேசாமல் இருந்தனர்.
இந்நிலையில் பிரபுதேவாவுடனான காதல் முறிந்து மீண்டும் நயன்தாரா நடிக்க வந்ததால் ஆர்யாவுடனான நட்பு புதுப்பிக்கப்பட்டு உள்ளது.
நாளடைவில் அந்த நட்பு இறுக்கமாகி காதலாக உருமாறியுள்ளது(யாருக்குத்தெரியும்?). சமீபத்தில் சென்னையில் ஆர்யா வீடு கட்டி குடியேறினார்.
அதன் கிரகப்பிரவேச விழாவில் நயன்தாராவை சிறப்பு விருந்தினராக அழைத்து கவுரவித்தார். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் கேக் வெட்டவும் வைத்தார்.
விஷ்ணுவர்த்தன் இயக்கும் புதுப்படத்தில் அஜீத், ஆர்யா, நயன்தாரா மூவரும் இணைந்து நடிக்கின்றனர்.

வேறு பட வேலைகளில் இருந்தாலும் இந்த படத்தில் நயன்தாரா நடிப்பதை பார்க்க அடிக்கடி படப்பிடிப்பு அரங்குக்கு வந்து விடுகிறாராம்.
மேக்கப் அறையில் நயன்தாராவும், ஆர்யாவும் பல மணி நேரம் கதவை அடைத்து பேசிக் கொண்டிருப்பதாக படக்குழுவினர் முணுமுணுக்கின்றனர்.
பிறகு இருவரும் நன்றாக மதிய உணவு சாப்பிடுகின்றனர். நயன்தாராவுக்கு புதுப்படங்களில் நடிக்க சிபாரிசும் செய்கிறாராம்.
முருகதாஸ் தயாரிக்கும் படமொன்றில் ஏற்கனவே ஒப்பந்தமான பிரியா ஆனந்தை நீக்க வைத்து நயன்தாராவை சேர்த்து விட்டாராம்.
இது குறித்து ஆர்யா கூறுகையில், நயன்தாராவையும், என்னையும் இணைத்து வரும் வதந்திகளுக்கு பதில் சொல்லி சோர்ந்து விட்டேன்.
எனது வீட்டுக்கிரகப்பிரவேசத்துக்கு அவரை அழைத்ததில் இருந்து இந்த கிசகிசுக்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
சக நடிகை என்ற முறையில் தான் நயன்தாராவை அழைத்து இருந்தேன். அதில் திரிஷாவும் கலந்து கொண்டார். விஷ்ணுவர்த்தன் படத்தில் நயன்தாராவுடன் நான்கு நாட்கள் தான் சூட்டிங் இருந்தது.
இந்த நிலையில் அவருக்காக படப்பிடிப்பு அரங்கில் காத்து கொண்டிருந்தேன், மேக்கப் அறையில் சந்தித்தோம், ஒன்றாக உணவு சாப்பிட்டோம் என்பது எப்படி சாத்தியம் ஆகும் என்று கோபத்துடன் தெரிவித்துள்ளார்.

Tuesday, October 23, 2012

அஞ்சலிக்கு முத்தமிட்டார் ஆர்யா

கொலிவுட்டில் உருவாகி வரும் படம் சேட்டை. இப் படத்தில் ஆர்யா, அஞ்சலி, ஹன்சிகா, சந்தானம்,பிரேம்ஜி ஆகியோர் நடிக்கின்றனர். இப் படத்தை கண்ணன் இயக்குகின்றார்.  படத்திற்காக ஆர்யா, அஞ்சலி நடிக்கும் முத்தக்காட்சிகளை சமீபத்தில் எடுத்துள்ளனர்.

பாலிவுட்டில் நகைச்சுவை சரவெடியாக வெடித்த டெல்லி பெல்லி படத்தின் ரீமேக்கே சேட்டை.
விறுவிறுப்பான படப்பிடிப்பில் ஆர்யா அஞ்சலியின் முத்தக்காட்சிகளை இயக்குனர் கண்ணன் எடுத்து முடித்திருக்கிறார்.
அநேகமாக இக்காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
டெல்லி பெல்லி படத்தில் நாயகி பூர்ணா ஜெகனாதன் காரை ரிவர்ஸில் எடுக்கும் போது நாயகன் இம்ரான்கான் முத்தமிடுவது போன்ற காட்சிகளை அமைத்திருந்தனர் குறிப்பிடத்தக்கது.

அதிரடியாக வெளிவந்த துப்பாக்கி முன்னோட்டப் பாடல்

இவ் வருடம் மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் துப்பாக்கி. அதன் முன்னோட்ட பாடல் காட்சி அதிரடியாக வெளியிடப்பட்டது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்து வெளிவரும் திரைப்படம் துப்பாக்கி. ஹரிஷ் ஜெயராஜின் (சுட்ட) இசையில் பாடல்கள் அனைத்தும் பிரமாதம். அதில் கூகிள் கூகிள் என்ற பாடலை விஜயே பாடியுள்ளார். அந்தப் பாடல் வெளியாகியுள்ளது. விஜய் வழக்கம் போல நடனத்திலும் பட்டையை கிளப்பியுள்ளார்.

அஜித்திற்காக குத்தாட்டம் ஆடத் தயார்.. ஸ்ரீதேவி பேட்டி

முன் ஒரு காலத்தில் கொலிவுட் முதல் பாலிவுட் வரை கனவுக்கன்னியாக ஜொலித்தவர் நடிகை ஸ்ரீதேவி.
இவர் பாலிவூட் இன் பிரபல தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டார்.இவர் திருமணத்திற்கு பின்பு நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்தார்.
பலவருடங்களுக்கு பின்பு மீண்டும் சமீபத்தில் இவர் நடித்து வெளி வந்த திரைப்படம் இங்கிலிஷ் விங்கிலிஷ்.

இப்படத்தில் ஆங்கிலம் தெரியாததால் சிரமப்படும் குடும்பத்தலைவியாக நடித்து அனைவரையும் கவர்ந்தார்.
இப்படத்தில் கௌரவ வேடத்தில் நடித்த அஜித் குமார் பணம் எதுவும் வாங்காமல் தனது சொந்த செலவிலேயே மும்பைக்கு சென்று நடித்துக் கொடுத்தார்.
இதனால் மகிழ்ச்சியடைந்த ஸ்ரீதேவி பேட்டியின் போது கூறுகையில், அஜித் தனது படத்தில் நடிக்க அழைத்தால் நிச்சயம் நடிப்பேன் என்றும் குத்துப்பாடலுக்கு ஆட அழைத்தாலும் கூட தயார் எனவும் கூறியுள்ளார்.

தீபாவளி ரிலீஸ்...

எதிர்வரும் தீபாவளி தினத்தில் எந்த எந்த திரைப்படங்கள் வெளியாகும் என்பது குழப்பமாகவே உள்ளது. எனினும் ஏழு திரைப்படங்கள் வெளிவரவுள்ளன என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினியின் ‘கோச்சடையான்’, கமலின் ‘விஸ்வரூபம்’ படங்கள் இத் தீபாவளிக்கு வெளிவராது எனத் தெரிகிறது .
தற்போதைய நிலவரப்படி ‘துப்பாக்கி‘, ‘கும்கி‘, ‘போடா போடி‘, ‘அம்மாவின் கைப்பேசி‘, ‘கள்ளத்துப்பாக்கி’, ‘அஜந்தா’, ‘லொள்ளு தாதா பராக்பராக்’ ஆகிய 7 படங்கள் தீபாவளிக்கு ரிலீசாவது உறுதியாகியுள்ளது.

‘துப்பாக்கி’யில் விஜய், காஜல் அகர்வால் ஜோடியாக நடித்துள்ளனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இத் திரைப்படம் மும்பை குண்டு வெடிப்பை மையமாக வைத்து தயாராகியுள்ளது.
‘போடா போடி’யில் சிம்பு நடித்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். காதல் கதையாக தயாராகியுள்ளது.
‘கும்கி’ யில் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு கதாநாயகனாக அறிமுகமாகிறார். பிரபு சாலமன் இயக்கியுள்ளார். யானையை அடக்கும் இளைஞனை பற்றிய கதை.
நாயகனின் குளோஸ் அப் காட்சிகள் எடுக்க வேண்டியுள்ளதால் இப்படம் தீபாவளிக்கு வெளியாகுமா என்பது சந்தேகமாக உள்ளது.
‘அம்மாவின் கைபேசி’ படம் தாய்க்கும், மகனுக்குமான பாச போராட்டத்தை விளக்கும் கதையம்சம் உள்ள படமாக தயாராகியுள்ளது. தங்கர் பச்சான் இயக்கியுள்ளார். பாக்யராஜின் மகன் சாந்தனு நாயகனாக நடித்துள்ளார்.
ரவிதேவனின் ‘கள்ளத்துப்பாக்கி’ திரில்லர் படமாக தயாராகியுள்ளது.
‘லொள்ளு தாதா பராக் பராக்’ படத்தில் மன்சூர்அலிகான் நாயகனாக நடித்துள்ளார். கந்து வட்டியை மையமாக வைத்து கொமெடி படமாக தயாராகியுள்ளது.
‘அஜந்தா’ படத்தை ராஜ்பா ரவிசங்கர் திருமால் இயக்கியுள்ளனர். காதல் கதையாக தயாராகியுள்ளது. மொத்தத்தில் இந்தத் தீபாவளிக்கு ரசிகர்களுக்கு நல்ல விருந்து காத்திருக்கிறது.

Monday, October 22, 2012

ரஜினிக்கு கதை சொன்னாரா கே.வி.ஆனந்த்?



இன்று கோடம்பாக்கத்தை கலக்கிக் கொண்டிருக்கும் விடயம் என்னவென்றால், இயக்குனர் கே.வி.ஆனந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு கதை சொன்னது தான். ஆனால் இதை  இயக்குனர் கே.வி.ஆனந்த் முற்றாக மறுத்துள்ளார். அவ்வாறு எந்தக் கதையும் தான் ரஜினிக்கு சொல்லவில்லை என்றும் அது வதந்தியே என்றும் கூறியுள்ளார். தன்னிடம் தற்போது கைவசம் எந்தப் படத்திற்கான கதையும் இல்லையாம். தனது அடுத்த படத்திற்கான கதையை இனித்தான் சுடப் போவதாகவும் மன்னிக்கவும் எழுதப்போவதாகவும் தெரிவித்துள்ளார். ரஜினியை இயக்கும் வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக இயக்குவேன் என்று கூறியுள்ளார். 



 இயக்குனர் கே.வி.ஆனந்த் இறுதியாக இயக்கிய திரைப்படம் மாற்றான். இது பெருமளவில் எதிர்பார்க்கப்பட்டாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை சரியாக பூர்த்தி செய்யவில்லை. ஆங்கிலப் படத்தின் தழுவலாக இப்படம் வெளிவந்திருந்தது. அது மட்டுமல்லாமல் ஒட்டிப்பிறந்த சகோதரர்களின் கதையை மையமாகக் கொண்டு இதே காலப்பகுதியில் வெளிவந்த சாருலதா என்கிற திரைப்படம் மாற்றானின் மையக்கருவை வெளிக்கொண்டு வந்ததால் ரசிகர்களுக்கு புதிதான கதையாக தெரியவில்லை. 

Sunday, October 21, 2012

பேரரசுவின் கொலைவெறித் தாக்குதல்- திருத்தணி




எல்லாருக்கும் வணக்கமுங்கோ... எல்லாத்துக்கும் முதல் இந்த பக்கத்தை ஆரம்பிக்க காரணமா இருந்த திருத்தணி பட குழுவுக்கு நன்றி.. அந்த படத்த பாத்து மனம் நொந்து போய் எழுதத் தொடங்குறன்.


முதல்ல இந்த படத்த பத்தி எனக்கு நிறைய உண்மை தெரிஞ்சாகணும். ஒண்ணு இந்த படத்துக்கு ஹீரோ விஜய்யா? பரத்தா?. அடுத்தது இது இந்த இயக்குனர் பேரரசு ரீமேக் எண்டுறத பிழையா விளங்கிக் கொண்டுடாரா?. இன்னும் ஒண்ணு இந்த இயக்குனர் வேற இயக்குனர்களுட படமே பாக்குறல்லையா? வேற இயக்குனர்களுட படத்த பாக்காட்டியும் பறவாயில்ல அவர் இயக்கின படத்தையாவது பாக்கலாமே..


எனக்கு இப்பிடி சந்தேகங்கள் வர நிறையக் காரணங்கள் இருக்கு. படத்திட ஒபெனிங் சீன்லையே விஜய் ரவுடிக் கும்பலை புரட்டி எடுப்பது போல தான் காட்டியிருந்தாங்க. பிறகு எந்த சீன்ல பாத்தாலும் விஜய்ட கதை தான் போகுது. எழுத்தோட்டத்திலையே எம்.ஜி.ஆர் ட பாட்டப் போட்டு சம்பாதிக்க பாத்திருக்காங்க. பேரரசு இதுக்கு முதல் இயக்கின திருப்பாச்சி,சிவகாசி, திருப்பதி எல்லா படத்துட கலவையாவும் இந்தப் படம் வந்திருக்கு. அது மட்டும் இல்லாம கதை, திரைக்கதை, இயக்கம், வசனம், பாடல்களோட மட்டும் விடாம இந்த முறை இவரின் கொலைவெறித் தாக்குதல் இசை வரை பரவியிருக்கு. ஒழுங்கா இசையமச்சா பறவாயில்ல, இதுக்கு முதல் வந்த இவர்ட பட பாடல்கள்ட இசைய சுட்டு வரிகளை மட்டும் மாத்தி பாட்டு போட்டிருக்கார்.(கேளுங்க மகா ஜனங்களே இதுக்கு பேர் தான் இசயமைக்கிறதாம்.) இந்திய சினிமாத் துறை இன்றைய கால கட்டத்தில் எவளவோ முன்னேறிவிட்டது. அந்நிய முதலீடுகள் சினிமாத்துறைக்கு எவளவோ கிடைக்கிறது. இப்பிடி இருக்ககுள்ள இப்பிடி படம் எடுத்தா மக்களுக்கு சினிமா துறையில் வெறுப்பு தான் வரும். நல்லா இருந்த பரத்த ஆக்சன் ஹீரோ வா மாத்தி அவருக்கு இருந்த நல்ல பெயரையும் கெடுத்துட்டார். படத்துக்கு பிளஸ் பாயிண்ட் எண்டா நாயகி சுனைனாவ சொல்லலாம். இன்னொரு பிளஸ் பாயிண்ட் ராஜ்கிரண் எண்டு சொல்லலாம். ஆனா ராஜ்கிரண்ட கம்பீரமான குரலை கேட்காதது படத்துக்கு மைனஸ் பாயிண்ட் தான். வேறு ராஜ்கிரண்ட இராணுவ வாழ்கையை காட்டியது செம காமெடியா இருந்துது. துவக்க தூக்கிட்டு மரத்த சுத்தி சுத்தி விளையாடுறாரு. படத்தில் மொக்கை பஞ்ச்உம் பழகிப்போன வசனங்களும் பார்வையாளர்களை கடுப்பாக்குகிறது. எப்ப தான் இந்த இயக்குனர் திருந்தப் போறாரோ தெரியா.. வளர்ந்து வரும் நடிகரான பரத் தனது படத்திற்கான கதையை சிறப்பாக தேர்ந்தெடுக்க வேண்டும். இயக்குனருக்காக கதையை தேர்ந்தெடுக்காமல் நல்ல கதையை தேர்ந்தெடுக்க வேண்டும்.


மொத்தத்துல இது திரையரங்குக்கு போய் பாக்க வேண்டிய படமே இல்ல. இனி சும்மா நுழைவு சீட்ட தந்தாலும் நான் இந்த படத்த பாக்க போக மாட்டன்.