| உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள அழகிய பெண்களின் புகைப்படங்கள், அவர்களின் அணுகுமுறை போன்றவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு பிரபலத்தை அழகியாக அறிவிக்கிறது டோக்கியோ தொலைக்காட்சி. |
இந்த ஆண்டிற்கான இந்தியாவின் அழகியாக நடிகை நமீதாவை அறிவித்துள்ளது டோக்கியோ தொலைக்காட்சி. இந்தியாவின் புகைப்படக் கலைஞர் கார்த்திக் சீனிவாசன் எடுத்த புகைப்பட ஆல்பத்திலிருந்து நமீதாவின் ஒரு புகைப்படத்தைத் தெரிவு செய்து, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.இது குறித்து அந்த தொலைக்காட்சி வெளியிட்டுள்ள அறிவிப்புக் கடிதம்: யாரி சுகி கோ ஜி - அர்பன் லெஜன்ட்ஸ் ஸ்பெஷல் (Yari-sugi ko-ji -Urban Legends Special) எனும் தலைப்பில் வரும் நவம்பர் 2ம் திகதி ஒரு சிறப்பு ஒளிபரப்பை மேற்கொள்கிறோம். இதில் இந்தியாவுக்கான அழகியாக நடிகை நமீதாவை தெரிவு செய்துள்ளோம். வரும் நவம்பர் 2ம் திகதி இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. உலகின் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள சுவாரஸ்யமான உண்மைகள், சம்பவங்களை தொகுத்து வழங்குவதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள அழகிகள் பற்றி சிறப்பு நிகழ்ச்சியை வழங்குகிறோம். அழகு என்பது நாட்டுக்கு நாடு எப்படி மாறுபடுகிறது என்பதைக் காட்டுவதுதான் நோக்கம். இதற்காக இந்திய கலைஞர் கார்த்திக் சீனிவாசன் எடுத்த நடிகை நமீதாவின் படத்தை இந்திய அழகின் பிரதிநிதியாக தெரிவு செய்துள்ளோம். இந்திய அழகின் பிரதிநிதியாக நமீதாவின் படத்தை தெரிவு செய்துள்ளோம் என்பதைத் தெரிவிக்கவே இந்த முறையான அறிவிப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. |
Wednesday, October 31, 2012
இந்தியாவின் அழகியானார் நமீதா...
ரஜினியை புகழ்ந்து தள்ளிய தீபிகா..
| உடல் நிலை பாதிக்கப்பட்ட பின்பும் ரஜினியின் வேகம் குறையவில்லை என புகழ்ந்துள்ளார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன். |
| ரஜினி ஜோடியாக கோச்சடையான் படத்தில் நடித்துள்ளார் தீபிகா படுகோன். இது குறித்து அவர் கூறுகையில், சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்த அனுபவம் மறக்க முடியாதது. எத்தனை ஆண்டுகளாக அவர் சினிமாவில் இருக்கிறார். ஆனாலும் சினிமாவின் மீதான அவரது ஆர்வம் குறையவில்லை. ஷூட்டிங் ஸ்பாட்டில் மானிட்டர் முன் அமர்ந்து தான் நடித்த காட்சிகளை ஒரு குழந்தையை போல் பார்ப்பார். தான் நடித்த காட்சிகள் மட்டுமல்ல, மற்றவர்கள் நடித்த காட்சியைகூட பார்ப்பார். நன்றாக நடித்திருந்தால் உடனே கைதட்டி, பாராட்டுவார். அவரது கண்களை பார்த்தாலே சினிமா மீது அவருக்குள்ள ஈடுபாட்டை பார்க்க முடியும். அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டபோது வருத்தப்பட்டேன். அவர் சீக்கிரம் குணமடைய பிரார்த்தித்த ஏராளமானவர்களில் நானும் ஒருத்தி. அவர் சிகிச்சை முடிந்து திரும்பிய பின் படப்பிடிப்பில் பங்கேற்றார். உடல் நலம் பாதிப்பதற்கு முன் எந்த வேகத்துடன் இருந்தாரோ அதே வேகம் அவரது நடவடிக்கைகளில் தெரிந்தது. தமிழில் மட்டுமின்றி இந்தி, மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழியிலும் இப்படம் வெளியாகிறது என்று தெரிவித்துள்ளார். |
வெளியானது சிவாவின் 'சொன்னாப் புரியாது' teaser
மிர்ச்சி சிவா நடித்துள்ள சொன்னா புரியாது படம், அவருக்கு கொமெடி தளபதி என்ற பெயரை பெற்றுத்தருமென எதிர்பார்க்கப்படுகிறது.
முழு நீள கொமெடிப்படமாக உருவாகி வரும் இப்படத்தில் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக வசுந்ரா, பிளேட் சங்கர், ஆதிஷ், மனோபாலா என பலர் நடிக்கின்றனர்.
| இளைய தளபதி, அல்மேட் ஸ்டார், புரட்சித்தளபதி வரிசையில் கொமெடி தளபதியாக வலம் வரப்போகிறார் மிர்ச்சி சிவா. படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதி கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்க, யாதேஷ் மாதவ் இசையமைத்திருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தில்லு முல்லு படத்தின் ரீமேக்கில் சிவா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. |
Monday, October 29, 2012
Friday, October 26, 2012
விஜய் டிtvயின் சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 வெற்றியாளரானார் ஆஜித்
| ஆரம்பத்தில் நூற்றுக்கணக்கான யூனியர் பங்குகொண்டு ஆரம்பித்த இச் சுப்பூர் சிங்கர் யூனியர் திறமையானவர்களை தேர்ந்தெடுத்து கடந்த வாரமாக மிகவும் சூப்பராக பாடிய 5 யூனியர்களோடு இன்று கடைசி சுற்று முடிந்துள்ளது. எல்லோர் மனதையும் கொள்ளை கொண்டு 5 இளஞ்சிட்டுக்கள் ஒருவருக்கொருவர் சளைக்காமல் தம் திறமைகளை வெளிப்படுத்தி நன்றாகவே பாடினார்கள். இந்நிலையில் 10 வயதே நிரம்பிய ஆஜித் என்ற பையன் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை தன்னகத்தே கொண்டு இச்சூப்பர் சிங்கர் யூனியர் 3 இல் வெற்றி பெற்றுள்ளார். 10 வயதே நிரம்பிய ஆஜித் என்ற இளஞ்சிட்டு வசீகரத் தோற்றத்தோடு மெருகூட்டும்வகையில் அழகாக ஆடை அணிகலங்களோடு, தன் வயதுக்கு மீறி கடினமான பாடல்களையும் பாடி நடுவர்களையும் பார்வையாளர்களையும் தன்பக்கம் ஈர்த்து இன்று வெற்றிவாகை சூட்டிய அப்பையனுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, இரண்டாம் இடத்தைப் பெற்ற அமெரிக்காவில் இருந்து சென்று பங்குபற்றி இத்தனை மாதகாலமாகவும் தன் திறமையை வெளிப்படுத்திய பிரகதிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். சூப்பர் சிங்கர் யூனியர்1இலும் 2இலும் பங்குபற்றி திறமை போதாமையால் விலக்கப்பட்ட யாழினி சூப்பர் சிங்கர் யூனியர் 3இலும் பங்குகொண்டு இம்முறை 3ம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளார். |
தென்னிந்திய படத்தில் நடிக்க மாட்டாரா தமன்னா?
| தென்னிந்திய படங்களில் நடிக்க மாட்டேனா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார் தமன்னா. |
| அவர் கூறுகையில், ஹிம்மத்வாலா படம் எனது பாலிவுட் ரீ என்ட்ரி. இந்தியை பொருத்தவரை வருடத்துக்கு 2 படங்களுக்கு மேல் என்னால் நடிக்க முடியாது என்று எண்ணுகிறேன். இந்திக்கு செல்வதால் தென்னிந்திய படங்களுக்கு முழுக்கு போட்டு விடுவேன் என்று அர்த்தம் கிடையாது, அப்படி நினைத்துக்கூட பார்த்ததில்லை. இன்றைக்கு இந்த நிலைக்கு உயர்ந்திருக்க காரணம் தென்னிந்திய படங்கள் தான். தென்னிந்திய மொழிகளையும் நான் பேச கற்று வைத்திருக்கிறேன். இதனால் என் வேடங்களுக்கு நானே டப்பிங் பேசவும் தொடங்கி இருக்கிறேன். நான் பேசும் ஆங்கிலம் கூட தென்னிந்திய வாடையில் தான் இருக்கிறது. இந்தியில் நடிக்கிறேனென்றால் தென்னிந்திய படங்களில் கிடைக்கும் இடைவெளியாகவே இருக்கும் என்று தெரிவித்தார். |
40 கோடி செலவில் ஆதிபகவான்
| ஜெயம் ரவி, நீத்து சந்திரா நடிப்பில் அமீர் இயக்கத்தில் 'ஆதி பகவன்' படத்தை அன்பு பிக்சர்ஸ் ஜெ.அன்பழகன் தயாரித்துள்ளார். |
| இப்படம் பற்றி அமீர் கூறுகையில்: ராம், பருத்திவீரன் படங்களின் மூலம் யதார்த்த சினிமாவில் பயணித்த நான் முதல் முறையாக கமர்சியல் தளத்தில் பயணித்துள்ளேன். பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த அதிரடிஅபடமாக 'ஆதி பகவனை' உருவாக்கியுள்ளேன். படத்துக்காக சுமார் 150 நாட்களுக்கு மேலாக படக்குழு கடுமையாக உழைத்துள்ளது. குஜராத் மாநிலம் பூஜ், ராஜஸ்தான் ஜெய்சல்மர், கோவா, பாங்காக், ஹைதராபாத், மும்பை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் படபிடிப்பை நடத்தியுள்ளோம். படத்தின் இறுதி சண்டைக்காட்சியை பிஹானிர் கோட்டையில் பிரமாண்ட முறையில் படமாக்கினோம். யுவன் ஷங்கர் ராஜாவும் நானும் கை கோர்க்கும் ஐந்தாவது படம் இது. தமிழ் சினிமாவில் 7.1 டிஜிடல் ஒழி தொழில் நுட்பத்தில் தயாரான முதல் படம் ஆதிபகவான். கொலிவுட் தரத்தில் படத்தை உருவாக்கியுள்ளோம். நாற்பது கோடி செலவில் பிரமாண்ட படமாக ஆதிபகவன் வந்திருப்பதாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் 'ஆதிபகவன்' பட இயக்குனர் தெரிவித்துள்ளார். |
மாடல் அழகியின் மரணத்தால் அதிர்ந்து போன கவுதம் ...
| மிஸ் சென்னை போட்டியில் அழகி பட்டம் வென்ற மொடல் அழகி பிதுஷி மும்பையில் படுகொலை செய்யப்பட்டார். |
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். கவுதம் மேனன் இயக்கத்தில் கமல் நடித்த ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் பிரகாஷ்ராஜ் மகள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மராட்டிய மாநிலம் புனேயை சேர்ந்த என்ஜினீயர் கேதார் சதாசிவ் (வயது 26) என்பவரை காதலித்து மணந்தார். மும்பை அந்தேரியில் கணவருடன் வசித்து வந்த வீட்டிலேயே அவர் கொலை செய்யப்பட்டு உள்ளார். இந்த கொலை குறித்து இயக்குனர் கவுதம் மேனன் கூறுகையில், பிதுஷி கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து நான் அதிர்ச்சியானேன். ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் குறிப்பிட்ட காட்சியில் நடிக்க நிறையபேர் முன்வந்தனர். அவர்களில் பிதுஷி பொருத்தமானவராக இருந்தார். சில விளம்பரங்களில் மொடலாக நடித்து இருந்தார். அவர் தோற்றம் எனக்கு பிடித்ததால் தெரிவு செய்தேன். படப்பிடிப்பு தொடங்கிய இரண்டாவது நாளில் பிதுஷி சோர்வாக இருந்தார். அவருக்கு சர்க்கரை நோய் இருப்பதாக தெரிவித்தனர். படம் முடிந்த பின்பும் அவரது தாய் என்னுடன் தொடர்பில் இருந்தார் என்றும் இந்நிலையில் அவர் கொலை செய்யப்பட்ட செய்தியால் அதிர்ந்தேன் எனவும் கூறியுள்ளார். |
மீண்டுமொரு நித்தியானந்தா..
| ஆர் புரடக்ஷன்ஸ் சார்பில் ஆர். முத்துக்குமார் இயக்கும் புதிய படம் வெண்ணிலாவின் அரங்கேற்றம். |
ஆர். முத்துக்குமார் ஏற்கெனவே "தொடக்கம்" என்கிற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் புதுமுகங்கள் சமஸ்தி, மிதுனாவாலியா கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கதாநாயகனாக தினேஷ் நடிக்கிறார்."வெண்ணிலாவின் அரங்கேற்றம்" படத்துக்காக சர்ச்சைக்குரிய நித்யானந்தா - ரஞ்சிதா சம்பந்தப்பட்டது போன்ற ஒரு காட்சி படமாக்கப்பட்டது. சந்தர்ப்ப சூழ்நிலையில் விபச்சாரியாக மாற்றப்பட்ட இளம்பெண் ஒருவள் தனது வாழ்க்கையை விவரிக்கிறார். தனது ஒவ்வொரு இரவும் எப்படி கழிந்தது தன்னோடு படுக்கையை பகிர்ந்து கொண்ட பிரபலங்கள் யார்? யார்? என்பதை அவள் விவரிப்பதே படத்தின் கதை. படத்தில் ஒரு காட்சியில் இடம் பெறும் நித்யானந்தா சர்வானந்தா சித்தரிக்கப்பட்டிருக்கிறார். நித்யானந்தாவாக மூர்த்தி என்கிற திருநங்கை நடித்துள்ளார். அவருடன் படத்தின் கதாநாயகிகளில் ஒருவரான சமஸ்தி நடித்தார். விபச்சாரத் தொழிலில் உள்ள பல்வேறு தடங்களை கண்முன் கொண்டு வரும் காட்சி அமைப்புகள், அவர்களின் உள்மண உணர்வுகள் ஆகியவற்றை இயக்குனர் மிக தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறார். ![]() ![]() ![]() ![]() |
துப்பாக்கி முன்னோட்டக் காட்சி(trailer) வெளியீடு
பலரின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள துப்பாக்கி படத்தின் முன்னோட்டக்காட்சி வெளியிடப் பட்டது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இத் திரைப்படமானது போலீஸ் கதையை மையமாக வைத்து எடுக்கப் பட்டுள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். விஜய்க்கு வில்லனாக அஜித்தின் பில்லா 2 வின் வில்லன் நடித்துள்ளார்.
Thursday, October 25, 2012
ஆர்யாவுக்கு முத்தம் கொடுக்க தயங்கிய அஞ்சலி
இந்தியின் டெல்லி பெல்லி திரைப்படத்தின் ரீமேக் தான் ஆர்யா,சந்தானம், அஞ்சலி,பிரேம்ஜி நடிக்கும் சேட்டை. இத் திரைப்படத்தை கண்ணன் இயக்குகின்றார். டெல்லி பெல்லியில் நாயகன் இம்ரான் கான் இற்கும் நாயகி பூர்ணாவிற்கும் முத்தக்காட்சி ஒன்று இடம் பெற்றிருந்தது. அதே போல் தமிழிலும் முத்தக்காட்சி இடம்பெற்றால் நன்றாக இருக்கும் என இயக்குனர் கண்ணன் எண்ணியுள்ளார். இம் முத்தக்காட்சியைப் பற்றி முன்னர் அஞ்சலியிடம் கூறவில்லையாம். கூறாமலே அவரின் கால்ஷீட்டை வாங்கி விட்டார் கண்ணன். இப்பொழுது இத் திரைப்படம் மும்பையில் படமாக்கப்பட்டு வருகிறது. திட்டமிட்ட படி அந்த முத்தக்காட்சியையும் மும்பையிலேயே படமாக்க முடிவு செய்திருக்கிறது படக்குழு.
காட்சி படமாக்கப்பட முன்பு தான் அஞ்சலியிடம் இந்த முத்தக்காட்சி பற்றி இயக்குனர் தெரிவித்திருந்தார். இதைக்கேட்ட அஞ்சலி அதிர்ந்து போனார். முத்தக்காட்சிக்கும் தயங்கினார். இதனால் படப்பிடிப்பில் பதட்டம் நிலவியது.
பின்னர் இயக்குனர் அஞ்சலியிடம், நீங்கள் படத்தில் மாடர்ன் பெண்ணாக நடிக்கிறீர்கள். அது மட்டுமல்லாமல் தைரியமான பத்திரிகையாளராகவும் நடிக்கிறீர்கள். இக் காட்சி படத்தையும் உங்கள் வேடத்தையும் மெருகேற்றும் எனவும் கூறி சமாளித்துள்ளார். இறுதியில் சமாதானம் ஆனார் அஞ்சலி. முத்தக்காட்சியும் நடந்தது.(ஆர்யாக்கு முந்தி த்ரிஷா இப்ப அஞ்சலி ;) )
Wednesday, October 24, 2012
தேவி ஸ்ரீ பிரசாத்தை பாராட்டிய கார்த்தி
| கார்த்தி அனுஷ்கா நடித்து திரைக்கு வர இருக்கும் திரைப்படம் அலெக்ஸ் பாண்டியன். அலெக்ஸ் பாண்டியன் படத்தின் இறுதிகட்ட இசையை கேட்டு தேவி ஸ்ரீ பிரசாத்தை புகழ்ந்து தள்ளியுள்ளாராம் கார்த்தி. |
| சிறுத்தை படத்திற்கு பின்னர், கார்த்தி தன்னுடைய அதிரடி வேட்டையை அலெக்ஸ் பாண்டியன் படத்தின் மூலம் தொடங்க இருக்கிறார். திருமணத்திற்கு பின்னர் நடித்த சகுனி படம் முழு நீள ஆக்சன் படமென கூறமுடியாது.ஆனால் இதற்கு முன்பு நடித்த சிறுத்தை படத்திற்கு சமமான நிலையில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிற அலெக்ஸ் பாண்டியன் அதிரடி படமென கூறலாம். சமீபத்தில் வெளியான டீசரில், கார்த்தியின் அனல் பறக்கும் சண்டைக்காட்சிகள் படு பயங்கரமாக இருந்தது. இதற்கிடையில் படத்திற்கு இசை கோர்ப்பு வேலைகளும் முடியும் தருவாயில் உள்ளதாம். சமீபத்தில் இறுதிக்கட்ட இசைக்கோர்ப்பை கேட்ட கார்த்தி, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு பாராட்டு எஸ்.எம்.எஸ் அனுப்பினாராம். இதை தேவி, தனது டுவிட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார். |
கௌரவ பிளாக் பெல்ட் விருது வாங்கிய மோகன்லால்
| பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு தென் கொரிய நாட்டின் கராத்தே அமைப்பின் கவுரவ பிளாக்பெல்ட் விருது வழங்கப்பட உள்ளது. |
இதுபோன்ற விருது ஏற்கனவே, இந்தி நடிகர் ஷாருக்கானுக்கு வழங்கப்பட்டுள்ளது. மலையாள, தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் மோகன்லால். மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு விருதுகளை பெற்றுள்ள இவருக்கு மத்திய ராணுவத்தின், "லெப்டினென்ட் கர்னல்" அந்தஸ்து கொண்ட கவுரவ பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தென் கொரிய அரசின் கீழிலுள்ள, தாய்கோண்டா அமைப்பின் தலைமை நிலையமான, குக்கிஓண் சார்பில் ஆண்டுதோறும் கவுரவ பிளாக்பெல்ட் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான, இந்த விருது நடிகர் மோகன்லாலுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இவர், 1977-78ம் ஆண்டுகளில் கேரளாவில் மாநில குத்துச்சண்டை சாம்பியனாக இருந்தார். மேலும், திரைப்படங்களில் வீர விளையாட்டுக்களில் நடித்தும் சிறப்பித்துள்ளார்.
இதுபோன்ற, பல்வேறு சாதனைகளுக்காக, நடிகர் மோகன்லாலுக்கு இந்த விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விருது வழங்கும் விழா திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும், கேரள தாய்கோண்டா அமைப்பின் பொது செயலாளர் அஜி தெரிவித்தார்.
|
நயன்தாராவை சந்தித்த ஆர்யா
| பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் மூலம் ஆர்யா, நயன்தாரா இருவரும் இணைந்து நடித்தனர். படப்பிடிப்பில் ஆர்யாவின் கலகலப்பான பேச்சும், நடத்தைகளும் நயன்தாராவுக்கு பிடித்து இருந்தால், இருவரும் நண்பர்களாகி விட்டனராம். அதன் பிறகு பிரபுதேவாவுடன் திருமண ஏற்பாடு நடந்ததால் நயன்தாரா சினிமாவை விட்டு ஒதுங்கினார். இதனால் நட்பில் தடங்கல் ஏற்படவே, இருவரும் பேசாமல் இருந்தனர். இந்நிலையில் பிரபுதேவாவுடனான காதல் முறிந்து மீண்டும் நயன்தாரா நடிக்க வந்ததால் ஆர்யாவுடனான நட்பு புதுப்பிக்கப்பட்டு உள்ளது. நாளடைவில் அந்த நட்பு இறுக்கமாகி காதலாக உருமாறியுள்ளது(யாருக்குத்தெரியும்?). சமீபத்தில் சென்னையில் ஆர்யா வீடு கட்டி குடியேறினார். அதன் கிரகப்பிரவேச விழாவில் நயன்தாராவை சிறப்பு விருந்தினராக அழைத்து கவுரவித்தார். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் கேக் வெட்டவும் வைத்தார். விஷ்ணுவர்த்தன் இயக்கும் புதுப்படத்தில் அஜீத், ஆர்யா, நயன்தாரா மூவரும் இணைந்து நடிக்கின்றனர். வேறு பட வேலைகளில் இருந்தாலும் இந்த படத்தில் நயன்தாரா நடிப்பதை பார்க்க அடிக்கடி படப்பிடிப்பு அரங்குக்கு வந்து விடுகிறாராம். மேக்கப் அறையில் நயன்தாராவும், ஆர்யாவும் பல மணி நேரம் கதவை அடைத்து பேசிக் கொண்டிருப்பதாக படக்குழுவினர் முணுமுணுக்கின்றனர். பிறகு இருவரும் நன்றாக மதிய உணவு சாப்பிடுகின்றனர். நயன்தாராவுக்கு புதுப்படங்களில் நடிக்க சிபாரிசும் செய்கிறாராம். முருகதாஸ் தயாரிக்கும் படமொன்றில் ஏற்கனவே ஒப்பந்தமான பிரியா ஆனந்தை நீக்க வைத்து நயன்தாராவை சேர்த்து விட்டாராம். இது குறித்து ஆர்யா கூறுகையில், நயன்தாராவையும், என்னையும் இணைத்து வரும் வதந்திகளுக்கு பதில் சொல்லி சோர்ந்து விட்டேன். எனது வீட்டுக்கிரகப்பிரவேசத்துக்கு அவரை அழைத்ததில் இருந்து இந்த கிசகிசுக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. சக நடிகை என்ற முறையில் தான் நயன்தாராவை அழைத்து இருந்தேன். அதில் திரிஷாவும் கலந்து கொண்டார். விஷ்ணுவர்த்தன் படத்தில் நயன்தாராவுடன் நான்கு நாட்கள் தான் சூட்டிங் இருந்தது. இந்த நிலையில் அவருக்காக படப்பிடிப்பு அரங்கில் காத்து கொண்டிருந்தேன், மேக்கப் அறையில் சந்தித்தோம், ஒன்றாக உணவு சாப்பிட்டோம் என்பது எப்படி சாத்தியம் ஆகும் என்று கோபத்துடன் தெரிவித்துள்ளார். |
Tuesday, October 23, 2012
அஞ்சலிக்கு முத்தமிட்டார் ஆர்யா
கொலிவுட்டில் உருவாகி வரும் படம் சேட்டை. இப் படத்தில் ஆர்யா, அஞ்சலி, ஹன்சிகா, சந்தானம்,பிரேம்ஜி ஆகியோர் நடிக்கின்றனர். இப் படத்தை கண்ணன் இயக்குகின்றார். படத்திற்காக ஆர்யா, அஞ்சலி நடிக்கும் முத்தக்காட்சிகளை சமீபத்தில் எடுத்துள்ளனர்.
|
பாலிவுட்டில் நகைச்சுவை சரவெடியாக வெடித்த டெல்லி பெல்லி படத்தின் ரீமேக்கே சேட்டை.
விறுவிறுப்பான படப்பிடிப்பில் ஆர்யா அஞ்சலியின் முத்தக்காட்சிகளை இயக்குனர் கண்ணன் எடுத்து முடித்திருக்கிறார்.
அநேகமாக இக்காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
டெல்லி பெல்லி படத்தில் நாயகி பூர்ணா ஜெகனாதன் காரை ரிவர்ஸில் எடுக்கும் போது நாயகன் இம்ரான்கான் முத்தமிடுவது போன்ற காட்சிகளை அமைத்திருந்தனர் குறிப்பிடத்தக்கது.
|
அதிரடியாக வெளிவந்த துப்பாக்கி முன்னோட்டப் பாடல்
இவ் வருடம் மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் துப்பாக்கி. அதன் முன்னோட்ட பாடல் காட்சி அதிரடியாக வெளியிடப்பட்டது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்து வெளிவரும் திரைப்படம் துப்பாக்கி. ஹரிஷ் ஜெயராஜின் (சுட்ட) இசையில் பாடல்கள் அனைத்தும் பிரமாதம். அதில் கூகிள் கூகிள் என்ற பாடலை விஜயே பாடியுள்ளார். அந்தப் பாடல் வெளியாகியுள்ளது. விஜய் வழக்கம் போல நடனத்திலும் பட்டையை கிளப்பியுள்ளார்.
அஜித்திற்காக குத்தாட்டம் ஆடத் தயார்.. ஸ்ரீதேவி பேட்டி
| முன் ஒரு காலத்தில் கொலிவுட் முதல் பாலிவுட் வரை கனவுக்கன்னியாக ஜொலித்தவர் நடிகை ஸ்ரீதேவி. |
| இவர் பாலிவூட் இன் பிரபல தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டார்.இவர் திருமணத்திற்கு பின்பு நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்தார். பலவருடங்களுக்கு பின்பு மீண்டும் சமீபத்தில் இவர் நடித்து வெளி வந்த திரைப்படம் இங்கிலிஷ் விங்கிலிஷ். இப்படத்தில் ஆங்கிலம் தெரியாததால் சிரமப்படும் குடும்பத்தலைவியாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். இப்படத்தில் கௌரவ வேடத்தில் நடித்த அஜித் குமார் பணம் எதுவும் வாங்காமல் தனது சொந்த செலவிலேயே மும்பைக்கு சென்று நடித்துக் கொடுத்தார். இதனால் மகிழ்ச்சியடைந்த ஸ்ரீதேவி பேட்டியின் போது கூறுகையில், அஜித் தனது படத்தில் நடிக்க அழைத்தால் நிச்சயம் நடிப்பேன் என்றும் குத்துப்பாடலுக்கு ஆட அழைத்தாலும் கூட தயார் எனவும் கூறியுள்ளார். |
தீபாவளி ரிலீஸ்...
| எதிர்வரும் தீபாவளி தினத்தில் எந்த எந்த திரைப்படங்கள் வெளியாகும் என்பது குழப்பமாகவே உள்ளது. எனினும் ஏழு திரைப்படங்கள் வெளிவரவுள்ளன என எதிர்பார்க்கப்படுகிறது. |
| ரஜினியின் ‘கோச்சடையான்’, கமலின் ‘விஸ்வரூபம்’ படங்கள் இத் தீபாவளிக்கு வெளிவராது எனத் தெரிகிறது . தற்போதைய நிலவரப்படி ‘துப்பாக்கி‘, ‘கும்கி‘, ‘போடா போடி‘, ‘அம்மாவின் கைப்பேசி‘, ‘கள்ளத்துப்பாக்கி’, ‘அஜந்தா’, ‘லொள்ளு தாதா பராக்பராக்’ ஆகிய 7 படங்கள் தீபாவளிக்கு ரிலீசாவது உறுதியாகியுள்ளது. ‘துப்பாக்கி’யில் விஜய், காஜல் அகர்வால் ஜோடியாக நடித்துள்ளனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இத் திரைப்படம் மும்பை குண்டு வெடிப்பை மையமாக வைத்து தயாராகியுள்ளது. ‘போடா போடி’யில் சிம்பு நடித்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். காதல் கதையாக தயாராகியுள்ளது. ‘கும்கி’ யில் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு கதாநாயகனாக அறிமுகமாகிறார். பிரபு சாலமன் இயக்கியுள்ளார். யானையை அடக்கும் இளைஞனை பற்றிய கதை. நாயகனின் குளோஸ் அப் காட்சிகள் எடுக்க வேண்டியுள்ளதால் இப்படம் தீபாவளிக்கு வெளியாகுமா என்பது சந்தேகமாக உள்ளது. ‘அம்மாவின் கைபேசி’ படம் தாய்க்கும், மகனுக்குமான பாச போராட்டத்தை விளக்கும் கதையம்சம் உள்ள படமாக தயாராகியுள்ளது. தங்கர் பச்சான் இயக்கியுள்ளார். பாக்யராஜின் மகன் சாந்தனு நாயகனாக நடித்துள்ளார். ரவிதேவனின் ‘கள்ளத்துப்பாக்கி’ திரில்லர் படமாக தயாராகியுள்ளது. ‘லொள்ளு தாதா பராக் பராக்’ படத்தில் மன்சூர்அலிகான் நாயகனாக நடித்துள்ளார். கந்து வட்டியை மையமாக வைத்து கொமெடி படமாக தயாராகியுள்ளது. ‘அஜந்தா’ படத்தை ராஜ்பா ரவிசங்கர் திருமால் இயக்கியுள்ளனர். காதல் கதையாக தயாராகியுள்ளது. மொத்தத்தில் இந்தத் தீபாவளிக்கு ரசிகர்களுக்கு நல்ல விருந்து காத்திருக்கிறது. |
Monday, October 22, 2012
ரஜினிக்கு கதை சொன்னாரா கே.வி.ஆனந்த்?
இன்று கோடம்பாக்கத்தை கலக்கிக் கொண்டிருக்கும் விடயம் என்னவென்றால், இயக்குனர் கே.வி.ஆனந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு கதை சொன்னது தான். ஆனால் இதை இயக்குனர் கே.வி.ஆனந்த் முற்றாக மறுத்துள்ளார். அவ்வாறு எந்தக் கதையும் தான் ரஜினிக்கு சொல்லவில்லை என்றும் அது வதந்தியே என்றும் கூறியுள்ளார். தன்னிடம் தற்போது கைவசம் எந்தப் படத்திற்கான கதையும் இல்லையாம். தனது அடுத்த படத்திற்கான கதையை இனித்தான் சுடப் போவதாகவும் மன்னிக்கவும் எழுதப்போவதாகவும் தெரிவித்துள்ளார். ரஜினியை இயக்கும் வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக இயக்குவேன் என்று கூறியுள்ளார்.
இயக்குனர் கே.வி.ஆனந்த் இறுதியாக இயக்கிய திரைப்படம் மாற்றான். இது பெருமளவில் எதிர்பார்க்கப்பட்டாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை சரியாக பூர்த்தி செய்யவில்லை. ஆங்கிலப் படத்தின் தழுவலாக இப்படம் வெளிவந்திருந்தது. அது மட்டுமல்லாமல் ஒட்டிப்பிறந்த சகோதரர்களின் கதையை மையமாகக் கொண்டு இதே காலப்பகுதியில் வெளிவந்த சாருலதா என்கிற திரைப்படம் மாற்றானின் மையக்கருவை வெளிக்கொண்டு வந்ததால் ரசிகர்களுக்கு புதிதான கதையாக தெரியவில்லை.
Sunday, October 21, 2012
பேரரசுவின் கொலைவெறித் தாக்குதல்- திருத்தணி
எல்லாருக்கும் வணக்கமுங்கோ... எல்லாத்துக்கும் முதல் இந்த பக்கத்தை ஆரம்பிக்க காரணமா இருந்த திருத்தணி பட குழுவுக்கு நன்றி.. அந்த படத்த பாத்து மனம் நொந்து போய் எழுதத் தொடங்குறன்.
முதல்ல இந்த படத்த பத்தி எனக்கு நிறைய உண்மை தெரிஞ்சாகணும். ஒண்ணு இந்த படத்துக்கு ஹீரோ விஜய்யா? பரத்தா?. அடுத்தது இது இந்த இயக்குனர் பேரரசு ரீமேக் எண்டுறத பிழையா விளங்கிக் கொண்டுடாரா?. இன்னும் ஒண்ணு இந்த இயக்குனர் வேற இயக்குனர்களுட படமே பாக்குறல்லையா? வேற இயக்குனர்களுட படத்த பாக்காட்டியும் பறவாயில்ல அவர் இயக்கின படத்தையாவது பாக்கலாமே..
எனக்கு இப்பிடி சந்தேகங்கள் வர நிறையக் காரணங்கள் இருக்கு. படத்திட ஒபெனிங் சீன்லையே விஜய் ரவுடிக் கும்பலை புரட்டி எடுப்பது போல தான் காட்டியிருந்தாங்க. பிறகு எந்த சீன்ல பாத்தாலும் விஜய்ட கதை தான் போகுது. எழுத்தோட்டத்திலையே எம்.ஜி.ஆர் ட பாட்டப் போட்டு சம்பாதிக்க பாத்திருக்காங்க. பேரரசு இதுக்கு முதல் இயக்கின திருப்பாச்சி,சிவகாசி, திருப்பதி எல்லா படத்துட கலவையாவும் இந்தப் படம் வந்திருக்கு. அது மட்டும் இல்லாம கதை, திரைக்கதை, இயக்கம், வசனம், பாடல்களோட மட்டும் விடாம இந்த முறை இவரின் கொலைவெறித் தாக்குதல் இசை வரை பரவியிருக்கு. ஒழுங்கா இசையமச்சா பறவாயில்ல, இதுக்கு முதல் வந்த இவர்ட பட பாடல்கள்ட இசைய சுட்டு வரிகளை மட்டும் மாத்தி பாட்டு போட்டிருக்கார்.(கேளுங்க மகா ஜனங்களே இதுக்கு பேர் தான் இசயமைக்கிறதாம்.) இந்திய சினிமாத் துறை இன்றைய கால கட்டத்தில் எவளவோ முன்னேறிவிட்டது. அந்நிய முதலீடுகள் சினிமாத்துறைக்கு எவளவோ கிடைக்கிறது. இப்பிடி இருக்ககுள்ள இப்பிடி படம் எடுத்தா மக்களுக்கு சினிமா துறையில் வெறுப்பு தான் வரும். நல்லா இருந்த பரத்த ஆக்சன் ஹீரோ வா மாத்தி அவருக்கு இருந்த நல்ல பெயரையும் கெடுத்துட்டார். படத்துக்கு பிளஸ் பாயிண்ட் எண்டா நாயகி சுனைனாவ சொல்லலாம். இன்னொரு பிளஸ் பாயிண்ட் ராஜ்கிரண் எண்டு சொல்லலாம். ஆனா ராஜ்கிரண்ட கம்பீரமான குரலை கேட்காதது படத்துக்கு மைனஸ் பாயிண்ட் தான். வேறு ராஜ்கிரண்ட இராணுவ வாழ்கையை காட்டியது செம காமெடியா இருந்துது. துவக்க தூக்கிட்டு மரத்த சுத்தி சுத்தி விளையாடுறாரு. படத்தில் மொக்கை பஞ்ச்உம் பழகிப்போன வசனங்களும் பார்வையாளர்களை கடுப்பாக்குகிறது. எப்ப தான் இந்த இயக்குனர் திருந்தப் போறாரோ தெரியா.. வளர்ந்து வரும் நடிகரான பரத் தனது படத்திற்கான கதையை சிறப்பாக தேர்ந்தெடுக்க வேண்டும். இயக்குனருக்காக கதையை தேர்ந்தெடுக்காமல் நல்ல கதையை தேர்ந்தெடுக்க வேண்டும்.
மொத்தத்துல இது திரையரங்குக்கு போய் பாக்க வேண்டிய படமே இல்ல. இனி சும்மா நுழைவு சீட்ட தந்தாலும் நான் இந்த படத்த பாக்க போக மாட்டன்.
Subscribe to:
Posts (Atom)
இந்தியாவின் புகைப்படக் கலைஞர் கார்த்திக் சீனிவாசன் எடுத்த புகைப்பட ஆல்பத்திலிருந்து நமீதாவின் ஒரு புகைப்படத்தைத் தெரிவு செய்து, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.





கவுதம் மேனன் இயக்கத்தில் கமல் நடித்த ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் பிரகாஷ்ராஜ் மகள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் புதுமுகங்கள் சமஸ்தி, மிதுனாவாலியா கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கதாநாயகனாக தினேஷ் நடிக்கிறார்.







.jpg)
.jpg)







