| எதிர்வரும் தீபாவளி தினத்தில் எந்த எந்த திரைப்படங்கள் வெளியாகும் என்பது குழப்பமாகவே உள்ளது. எனினும் ஏழு திரைப்படங்கள் வெளிவரவுள்ளன என எதிர்பார்க்கப்படுகிறது. |
| ரஜினியின் ‘கோச்சடையான்’, கமலின் ‘விஸ்வரூபம்’ படங்கள் இத் தீபாவளிக்கு வெளிவராது எனத் தெரிகிறது . தற்போதைய நிலவரப்படி ‘துப்பாக்கி‘, ‘கும்கி‘, ‘போடா போடி‘, ‘அம்மாவின் கைப்பேசி‘, ‘கள்ளத்துப்பாக்கி’, ‘அஜந்தா’, ‘லொள்ளு தாதா பராக்பராக்’ ஆகிய 7 படங்கள் தீபாவளிக்கு ரிலீசாவது உறுதியாகியுள்ளது. ‘துப்பாக்கி’யில் விஜய், காஜல் அகர்வால் ஜோடியாக நடித்துள்ளனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இத் திரைப்படம் மும்பை குண்டு வெடிப்பை மையமாக வைத்து தயாராகியுள்ளது. ‘போடா போடி’யில் சிம்பு நடித்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். காதல் கதையாக தயாராகியுள்ளது. ‘கும்கி’ யில் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு கதாநாயகனாக அறிமுகமாகிறார். பிரபு சாலமன் இயக்கியுள்ளார். யானையை அடக்கும் இளைஞனை பற்றிய கதை. நாயகனின் குளோஸ் அப் காட்சிகள் எடுக்க வேண்டியுள்ளதால் இப்படம் தீபாவளிக்கு வெளியாகுமா என்பது சந்தேகமாக உள்ளது. ‘அம்மாவின் கைபேசி’ படம் தாய்க்கும், மகனுக்குமான பாச போராட்டத்தை விளக்கும் கதையம்சம் உள்ள படமாக தயாராகியுள்ளது. தங்கர் பச்சான் இயக்கியுள்ளார். பாக்யராஜின் மகன் சாந்தனு நாயகனாக நடித்துள்ளார். ரவிதேவனின் ‘கள்ளத்துப்பாக்கி’ திரில்லர் படமாக தயாராகியுள்ளது. ‘லொள்ளு தாதா பராக் பராக்’ படத்தில் மன்சூர்அலிகான் நாயகனாக நடித்துள்ளார். கந்து வட்டியை மையமாக வைத்து கொமெடி படமாக தயாராகியுள்ளது. ‘அஜந்தா’ படத்தை ராஜ்பா ரவிசங்கர் திருமால் இயக்கியுள்ளனர். காதல் கதையாக தயாராகியுள்ளது. மொத்தத்தில் இந்தத் தீபாவளிக்கு ரசிகர்களுக்கு நல்ல விருந்து காத்திருக்கிறது. |
Tuesday, October 23, 2012
தீபாவளி ரிலீஸ்...
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment