கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக வெளியாகிறது பரதேசி..
இயக்குனர் பாலா இயக்கிக் கொண்டிருக்கும் திரைப்படம் பரதேசி. இதில் அதர்வா, தன்ஷிகா ஆகியோர் நடிக்கிறார்கள். இத் தீபாவளிக்கு வெளியாகும் என பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இத் திரைப்படம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளது. இம் மாதம் 24ம் திகதியளவில் இப் படத்தின் பாடல்களை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இப் படம் 1930களின் பின்னணியில் உருவாக்கப்படுகிறது. மலையாள நாவல் ஒன்றின் கதையை மையமாகக் கொண்டு இப் படத்தை இயக்கியுள்ளார் பாலா. நாஞ்சில் நாடன் இப் படத்திற்கான வசனத்தை எழுதியுள்ளார்.
No comments:
Post a Comment