| உலகநாயகன் கமல் இயக்கி, நடித்துள்ள ‘விஸ்வரூபம்’ படம் ‘ஆரோ 3டி’ ஒலி தொழில்நுட்பத்தில் தயாராகியுள்ளது. |
இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. டிரெய்லரை வெளியிட்ட கமலஹாசன் பேசுகையில், ‘விஸ்வரூபம்’ படத்தின் ‘ஆரோ 3டி’ டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டு உள்ளது.இசை வெளியீட்டு விழாவை முக்கிய நகரங்களில் இன்று நடத்த திட்டமிட்டோம். வானிலை சாதகமில்லாததால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ரசிகர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக 25 ஊர்களில் ‘விஸ்வரூபம்’ டிரெய்லரை ரசிகர்கள் காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இங்கு ரலீஸ் செய்த நேரத்தில் மற்ற ஊர்களில் 30 ஆயிரம் ரசிகர்கள் அரங்குகளில் அமர்ந்து இதை கண்டு இருப்பார்கள். ‘விஸ்வரூபம்’ ரிலீஸ் திகதி இன்னும் முடிவாகவில்லை. இந்தியிலும் இப்படத்தை வெளியிடுகிறோம் என்றார். விஸ்வரூபம்’ இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிரான படமா? என்ற கேள்விக்கு பதிலளித்த கமல், இந்த படம் எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல. இந்தியாவில் எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதே என் விருப்பம். நான் காந்தியின் பக்தன். இங்கு எந்த மதத்தினர் உட்கார்ந்து இருக்கிறார்கள் என்று பார்க்க மாட்டேன். மனிதர்களைத்தான் பார்க்கிறேன். மதங்களை கொண்டாடுவது இல்லை. மனிதர்களை கொண்டாடுகிறேன். எந்த மதத்தினரையும் வித்தியாசமாக பார்ப்பது இல்லை என்றும் காந்திய வழியிலேயே எனது அணுகுமுறைகளும் இருக்கும் எனவும் கூறியுள்ளார். ![]() |
Thursday, November 8, 2012
காந்தியின் பக்தன் நான்: கமலஹாசன் பேட்டி
Subscribe to:
Post Comments (Atom)
டிரெய்லரை வெளியிட்ட கமலஹாசன் பேசுகையில், ‘விஸ்வரூபம்’ படத்தின் ‘ஆரோ 3டி’ டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டு உள்ளது.

No comments:
Post a Comment