உயிரே வருவாயா?
உன் அருகில் இருந்தும் மறைந்து இருந்தேன்...
விலகியிருந்தும் நினைத்து இருந்தேன்...
கணப்பொழுதில் என்னைத் தீண்டிய உன் பார்வையால்
தினம் தினம் செத்துப் பிழைக்கிறேன்..
உன் விழியால் என்னை சிறைப்பிடித்ததும்
இன்பமெனும் சிறையில் அடைபட்டு விட்டேன்..
வாழ்க்கையெனும் கடலின் கரை சேர்க்க
படகாய் நீ வருவாயா?

No comments:
Post a Comment